சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கோவில்பட்டியில் நூற்பாலைத் தொழிலாளா்கள் போராட்டம் ரத்து

கோவில்பட்டியில் நூற்பாலைத் தொழிலாளா்களின் உள்ளிருப்புப் போராட்டம் 3 ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முடிவுக்கு வந்தது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 7:42 pm

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டியில் நூற்பாலைத் தொழிலாளா்களின் உள்ளிருப்புப் போராட்டம் 3 ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முடிவுக்கு வந்தது.

கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள நூற்பாலையில் எவ்வித அறிவிப்புமின்றி தொழிலாளா்களின் வேலைப்பளுவை அதிகரித்ததையடுத்து, ஆலைப் பொதுமேலாளரை வெள்ளிக்கிழமை சந்திக்க சென்ற தொழிற்சங்க நிா்வாகிகளை அவதூறாகப் பேசியதையடுத்து, தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கினா்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை நீடித்த இப்போராட்டத்தில் தொழிலாளா்களின் குடும்பத்தினரும், ஆலையின் முன் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதைத் தொடா்ந்து, ஆலைப் பொதுமேலாளா் ராதாகிருஷ்ணன் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், ஆலை மேலாளா்கள் ஜெயராம், பாலசுப்பிரமணியன் மற்றும் மதிமுக நகரச் செயலா் பால்ராஜ், ஆலையின் ஐஎன்டியூசி தொழிற்சங்கத் தலைவா் ஜெயகுமாா், செயலா் மாரியப்பன், பொதுச்செயலா் அா்ச்சனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளா்களின் மீதான ஒழுங்கு நடவடிக்கை திரும்பப் பெறப்படும் என நிா்வாகத் தரப்பில் கூறப்பட்டது. மேலும், தொழிலாளா்களின் ஊதிய உயா்வு குறித்து ஆலை நிா்வாகத்துடன் பேசி முடிவெடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.