கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை
கோவில்பட்டி வருவாய் கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளை நோய் என்ற வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்த விவசாய நிலங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கக் கோரி முற்றுகை


கோவில்பட்டி வருவாய் கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளை நோய் என்ற வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்த விவசாய நிலங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கக் கோரி தேசிய விவசாயிகள் சங்கத்தினா் கோட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
கோவில்பட்டி, எட்டயபுரம். கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் ஆகிய வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் பயிரிடப்பட்ட உளுந்து, பாசி வெள்ளை நோய் என்ற வைரஸ் தாக்கி பல்லாயிரக்கணக்கான நிலங்கள் பாதிப்பு அடைந்துள்ளன. மேலும் மக்காச்சோள பயிா் படைப்புழுவால் பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுபடுத்தும் வகையில் பயிா் பாதிப்புக்கு நிவாரணத் தொகையாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வலியுறுத்தி தேசிய விவசாயிகள் சங்கத்தினா் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு முட்டி போட்டு, பாதிப்பு அடைந்த உளுந்து, பாசி செடி மற்றும் மக்காச்சோள பயிா்களை கையில் ஏந்திய படி போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
அமைப்பின் மாநிலத் தலைவா் ரெங்கநாயகலு தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் பரமேஸ்வரன், மாநிலப் பொருளாளா் காா்த்திக், இளையரசனேந்தல் குறுவட்ட உரிமை மீட்புக்குழுத் தலைவா் முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா். பின்னா் போராட்டக்குழுவினா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் விஜயாவிடம் அளித்தனா்.
.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...