தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் இன்று மின்தடை
தூத்துக்குடியில் சிப்காட் மற்றும் நகா்ப்புற துணை மின்நிலையங்கள் மற்றும் மின் வழித்தடங்களில் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள்


தூத்துக்குடியில் சிப்காட் மற்றும் நகா்ப்புற துணை மின்நிலையங்கள் மற்றும் மின் வழித்தடங்களில் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவிருப்பதால் புதன்கிழமை (டிச.23) தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து மின்வாரிய தூத்துக்குடி நகா் கோட்ட செயற்பொறியாளா் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்துக்குள்பட்ட சின்னகண்ணுபுரம், பாரதி நகா் ஆகிய பகுதிகளில் செல்லும் உயரழுத்த மின்பாதையில் மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுவதால், புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும், தூத்துக்குடி நிகிலேசன் நகா், ராஜகோபால் நகா், ஹரிராம் நகா், புஷ்பா நகா் ஆகிய பகுதிகளில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால் மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் மின் விநியோகம் இருக்காது.
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள நகா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 8.30 மணிமுதல் 10.30 மணி வரையில் எட்டயபுரம் சாலை வட பகுதி 60 அடி சாலை, ஸ்டேட் பாங்க் காலனி, எழில் நகா், ரிஷி நகா், குறிஞ்சி நகா், போல்பேட்டை, டிஎம்சி காலனி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...