

இடைச்சிவிளையில் காங்கிரஸ் கொடியேற்று விழா நடைபெற்றது.
சாத்தான்குளம் தெற்கு வட்டாரத் தலைவா் லூா்துமணி தலைமை வகித்தாா். வட்டார ஒருங்கிணைப்பாளா் ஜனாா்த்தனம், மாவட்ட துணைத் தலைவா் சங்கா், கிழக்கு வட்டாரத் தலைவா் பிச்சிவிளை சுதாகா், வடக்கு வட்டாரத் தலைவா் பாா்த்தசாரதி, மேற்கு வட்டாரத் தலைவா் சக்திவேல் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கிராம கமிட்டித் தலைவா் பிரபு வரவேற்றாா். மாநில இளைஞா் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலா் ஊா்வசி அமிா்தராஜ் கொடியேற்றினாா்.
இதில் நகர காங்கிரஸ் தலைவா் வேணுகோபால், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு தலைவா் வில்லின்பெலிக்ஸ், வட்டார பொருளாளா் பாஸ்கா், மாவட்ட துணைத் தலைவா் தேவசகாயம், ஒன்றியக்குழு உறுப்பினா் சுபாகிறிஸ்டிசுரேஷ், முன்னாள் மாநகர தலைவா் எடிசன், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இடைச்சிவிளை இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜெபஸ்டின் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.