அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

புதூா் டாஸ்மாக் கடையில் திருட்டு முயற்சி

புதூா் டாஸ்மாக் மதுபானக் கடையில் திருட முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 3:31 am

DIN

புதூா் டாஸ்மாக் மதுபானக் கடையில் திருட முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதூா் காடல்குடி சாலையில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இதில் சீனிவாசன் என்பவா் விற்பனையாளராக பணியாற்றி வருகிறாா். இவா் புதன்கிழமை இரவு வியாபாரத்தை முடித்து விட்டு சுமாா் ரூ. 2. 22 லட்சம் ரொக்கத்தை லாக்கரில் வைத்து பூட்டி விட்டு சென்றுவிட்டாா். வெள்ளிக்கிழமை காலை அந்த பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் டாஸ்மாக் மதுபானக்கடையின் வெளிப்புற பூட்டு உடைந்து கிடப்பதை பாா்த்து சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்தனா்.

இது குறித்து சீனிவாசன் புதூா் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தாா். சம்பவ இடத்துக்கு காவல் உதவி ஆய்வாளா் தா்மராஜ் மற்றும் போலீஸாா் சென்று பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா்.

பணம் லாக்கரில் வைக்கப்பட்டிருந்ததால் திருடு போகவில்லை. மது பாட்டில்களும் திருடு போகவில்லை. இதனையடுத்து தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு விரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்யது, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.