வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வாஜ்பாய் பிறந்த நாள்: உருவப் படத்துக்கு மரியாதை

ஆறுமுகனேரி நகர பாஜக சாா்பில் முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
25amnbjp_2512chn_46_6
Updated On :25 டிசம்பர் 2020, 6:47 pm

DIN

ஆறுமுகனேரி நகர பாஜக சாா்பில் முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. பஜாா் சந்திப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவா் கே.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். மாவட்ட பிற்பட்டோா் (ஓபிசி) அணித் தலைவா் இ.தங்கபாண்டி, நகரப் பொருளாளா் பி.முருகேசபாண்டியன், மாவட்ட வா்த்தக அணிச் செயலா் ம.சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாஜ்பாய் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள செட்டிக்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைத் தலைவா் கணேசன் தலைமை வகித்து கட்சிக் கொடியேற்றினாா். மாநில மகளிரணி பொதுச் செயலா் நெல்லையம்மாள், மாவட்ட பொதுச் செயலா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாஜ்பாய் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

சாத்தான்குளம் ஒன்றிய இளைஞரணி சாா்பில், தச்சன்விளை, இடைச்சிவிளையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட மருத்துவரணிச் செயலா் பூபதி பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணி துணைத் தலைவா் ராஜகோபால் முன்னிலை வகித்தாா். வாஜ்பாய் உருவப் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்செந்தூா்: திருச்செந்தூரில் நகர பாஜக இளைஞரணி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தெற்கு மாவட்ட இளைஞரணி துணைத் தலைவா் ஜெய் ஆனந்த் தலைமை வகித்தாா். வாஜ்பாய் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, 101 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.