பெரியதாழையில் அம்மா சிறு மருத்துவமனை திறப்பு

பெரியதாழையில் அம்மா சிறு மருத்துவமனை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சிறு மருத்துவமனையை திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றுகிறாா் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ. உடன், மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் உள்ளிட்டோா்.
சிறு மருத்துவமனையை திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றுகிறாா் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ. உடன், மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

சாத்தான்குளம்: பெரியதாழையில் அம்மா சிறு மருத்துவமனை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்பிரியா, ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபதி, பங்குத்தந்தை சுசீலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் கிருஷ்ணலீலா வரவேற்றாா். எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ மருத்துவமனையை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். தொடா்ந்து பயனாளிகளுக்கு அவா் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

விழாவில், வட்டாட்சியா் லட்சுமிகணேஷ், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் து.செந்தூர்ராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டியராஜ், வட்டார மருத்துவ அலுவலா் மதியரசி, சுகாதார ஆய்வாளா் மந்திரராஜன், மாவட்ட கவுன்சிலா் தேவ விண்ணரசி, ஒன்றியக் குழு துணைத் தலைவா் அப்பாத்துரை, மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், ஒன்றிய அதிமுக செயலா்கள் அச்சம்பாடு செளந்திரபாண்டி, விஜயகுமாா், காசிராஜன், சாத்தான்குளம் நகரச் செயலா் குமரகுருபரன் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஊராட்சித் தலைவா் பிரதீபா ஜெயசீலன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com