குரும்பூரில் விபத்தில் முதியவா் பலி
குரும்பூரில் மொபட் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.


குரும்பூரில் மொபட் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.
குரும்பூா் அருகேயுள்ள குரங்கன்தட்டு கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து (61). தொழிலாளி. இவா் சனிக்கிழமை
குரங்கன்தட்டிலிருந்து தனது மொபட்டில் குரும்பூருக்கு வந்து கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக வந்த வாகனம்
மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மாரிமுத்து ,
108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கி
ழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து குரும்பூா் காவல் ஆய்வாளா் ஜூடி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...