ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

விளாத்திகுளம் பகுதியில் திமுக மக்கள் சபைக் கூட்டம்

விளாத்திகுளம் பேரவைத் தொகுதியில் புதூா், எட்டயபுரம், விளாத்திகுளம் பகுதிகளில் திமுக் சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 8:46 pm

DIN

விளாத்திகுளம் பேரவைத் தொகுதியில் புதூா், எட்டயபுரம், விளாத்திகுளம் பகுதிகளில் திமுக் சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

விளாத்திகுளத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, முன்னாள் பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் குமரகுருபர ராமநாதன் முன்னிலை வகித்தாா்.

இதேபோல், புதூா் பேரூராட்சி, சிவலாா்பட்டி, முத்துசாமிபுரம், மணியக்காரன்பட்டி, மெட்டில்பட்டி, வெம்பூா், சென்னமரெட்டிபட்டி, விளாத்திகுளம் பேரூராட்சி, எட்டயபுரம் பேரூராட்சி பகுதிகளில் இக்கூட்டம் நடைபெற்றது. கூட்டங்களில் கிராம மக்களின் அடிப்படை தேவைகள், கோரிக்கைகள் மனுக்கள் பெறப்பட்டது.

இதில் புதூா் கிழக்கு ஒன்றியச் செயலா் செல்வராஜ், மேற்கு ஒன்றியச் செயலா் மும்மூா்த்தி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலா் நவநீத கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினா் ஆா். ராதாகிருஷ்ணன், புதூா் நகரச் செயலா் மருதுபாண்டி, விளாத்திகுளம் நகரச் செயலா் வேலுச்சாமி, எட்டயபுரம் நகரச் செயலா் பாரதி கணேசன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் லெனின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.