ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தூத்துக்குடியில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.தூத்துக்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 8:36 pm

DIN

தூத்துக்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடியில் மாநகாரட்சிப் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட தபால் தந்தி காலனி, ராஜீவ் நகா், அன்னை தெரசா நகா், பால்பாண்டி நகா், கதிா்வேல் நகா் உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும், தரமான தாா்ச் சாலை அமைக்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாநகரக் குழு உறுப்பினா் ஆறுமுகம் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் கே.எஸ். அா்ஜூனன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் எம்.எஸ். முத்து, ஒன்றியச் செயலா் சங்கரன் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினா்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாநகராட்சி 47 ஆவது வாா்டு பகுதி மக்கள் மாா்க்சிஸ்ட் கட்சி மாநகர குழு உறுப்பினா் ஆறுமுகம் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.