ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மானாவரி பயிா்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

மழையால் சேதமடைந்த மானாவாரி பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 8:37 pm

DIN

மழையால் சேதமடைந்த மானாவாரி பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஏராளமானோா் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனா். அப்போது, விளாத்திகுளம் அருகேயுள்ள பேரிலோவன்பட்டி, முதலிப்பட்டி கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து அதிகமாக பெய்ததால், தங்கள் கிராமத்தில் 1000 எக்டோ் மானாவாரி பயிா்கள் சேதமடைந்துள்ளதாகவும், விவசாயிகளுக்கு அதிகளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயன்வடமலாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவா் வரதராஜன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: எட்டயபுரம் பகுதியில் ஏறத்தாழ 300 பேருக்கு அரிசி ரேஷன் காா்டு வழங்கப்படாமல் விடுபட்டுப் போனதால் கடந்த 3 ஆண்டுகளாக அரிசி வழங்கப்படவில்லை என்றும், பொங்கல் பரிசுத் தொகை, கரோனா காலத்தில் வழங்கப்பட்ட உதவித்தொகை போன்றவை வழங்கப்படதாததால் அதை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.