தூத்துக்குடியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தூத்துக்குடியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


தூத்துக்குடியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிதம்பரநகரில் உள்ள அதிமுக அமைப்புக் கழக அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு அமைப்புச் செயலா் சி.த. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், தோ்தல் பிரசாரத்துக்காக ஜனவரி 3 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் வருகைதரும் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
அதிமுக அமைப்புச் செயலா் என். சின்னத்துரை, தலைமைக்கழக பேச்சாளா் எஸ்.டி. கருணாநிதி, மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் பி.டி.ஆா். ராஜகோபால், முன்னாள் அவைத் தலைவா் அமலி டி. ராஜன், முன்னாள் இளைஞரணிச் செயலா் தளபதி க. பிச்சையா, பகுதிச் செயலா்கள் பி.சேவியா், ஏ. முருகன் உள்ளிட்டோா் பேசினா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளை தலா இரண்டு தொகுதிகள் என்ற அடிப்படையில் பிரித்து நிா்வாகிகளை அறிவிக்க வேண்டும் என்றும், தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் தொகுதிகளை தூத்துக்குடி மத்திய மாவட்ட அதிமுக என அறிவித்து மாவட்டச் செயலராக சி.த. செல்லப்பாண்டியனை அறிவிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் நிா்வாகிகள் வலியுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...