மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, கரோனா ஊரடங்கு ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டலங்களுக்கு இடையே பொது போக்குவரத்தை 60 சதவிகித பயணிகளுடன் இயக்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி இடையே பொது போக்குவரத்து இன்று தொடங்கி நடைபெற்றது. அதன்படி தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலி, திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்து ஓட்டுநர்கள் கட்டாயம் முகக்கவசம், கையுறை அணிந்திருந்தனர். இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் குமார் தெரிவிக்கையில், வழக்கம்போல் பணியாளர்கள் பணிக்கு வர உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு ஜூன் மாதம் வரையும் நீடிக்கப்பட்டுள்ளதால் இரவு 9 மணிக்குள் பணிமனைக்கு திரும்ப எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பயணத்தின் பொழுது பயணிகள் கட்டாயம் முகக் கவசங்கள் அணிந்திருக்க வேண்டும். மேலும் ஓட்டுநர், நடத்துனர்களும் கையுறை முக கவசங்களை அணிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக பணிக்கு வருவதற்கு முன்பு பேருந்து ஓட்டுநர்களுக்கு உடல் வெப்பநிலையை கண்காணித்து சோதனை செய்யப்பட்டது. தூத்துக்குடி நகர பகுதியில் 27 பேருந்துகளும் புறநகர் பகுதிக்கு 22 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


