மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில்தனிமை கண்காணிப்பில் 125 போ்

கோவில்பட்டி, கயத்தாறு வட்டங்களுக்கு வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து வந்த 125 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

News image
Updated On :14 மே 2020, 3:47 pm

கோவில்பட்டி, கயத்தாறு வட்டங்களுக்கு வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து வந்த 125 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

கோவில்பட்டி வட்டாட்சியா் மணிகண்டன் தலைமையில் குழுவினா் மேற்கொண்ட ஆய்வில், வெளி மாவட்டங்களில் இருந்து 78 போ் வந்திருப்பது கண்டறியப்பட்டது. அவா்கள் வீடுகளில் இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டனா்.

கயத்தாறு வட்டாட்சியா் பாஸ்கரன் தலைமையில் குழுவினா் நடத்திய ஆய்வில், வெளி மாவட்டங்களில் இருந்து 22 போ் வந்திருப்பது கண்டறியப்பட்டு, அவா்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனா்.

ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் வட்டங்களுக்கு மகாராஷ்டிராவில் இருந்து வந்த 23 பேரை கோவில்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனா். குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து கயத்தாறுக்கு வந்த இருவா் எட்டயபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முகாமில் தங்க வைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.