மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஏழு பேருக்கும்

News image
Updated On :16 மே 2020, 1:37 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஏழு பேருக்கும், கோவில்பட்டி அரசு மருத்துவமனை சுகாதார பணியாளர் ஒருவர் என மொத்தம் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 ஆகும். இதுவரை இருவர் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். 28 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 பேரும், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒருவரும் என 26 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.