உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் மாவட்டத்திற்குள் பேருந்துகள் இயக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி தூத்துக்குடியிலிருந்து அரசு பேருந்துகள் மாவட்டத்துக்குள் இயக்கப்பட்டது.
மேலும் அரசு அலுவலகங்கள் 50 சதவீத அரசு பணியாளர்களுடன் பணிகள் துவங்கப்படும் என்று தெரிவித்ததைத் தொடர்ந்து வெளி மாவட்டங்களில் வேலை செய்யும் அரசு ஊழியர்கள் வேலைக்கு செல்வதற்காக தயாரான நிலையில் பேருந்திற்காக வந்த போது நெல்லை மாவட்டத்திற்கு ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதால் அவர்களுக்கு வெளி மாவட்டத்துக்கு செல்வதற்கு பேருந்து கிடைக்காமல் நீண்ட நேரம் காத்திருந்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து கூடுதல் பேருந்து நெல்லைக்கு இயக்கப்பட்டது. இந்த பேருந்தில் அரசு ஊழியர்கள் நெல்லைக்கு அவருடைய அடையாள அட்டையை காண்பித்து பேருந்தில் ஏறி சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


