விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கோவில்பட்டியில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதல்: ஒருவர் பலி; 4பேர் காயம்

கோவில்பட்டியில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் ஒருவர் பலியானார்.

News image
Updated On :18 மே 2020, 3:56 am

DIN

கோவில்பட்டியில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் ஒருவர் பலியானார்.

கோவில்பட்டி இனாம்மணியாச்சி கிராமத்தினை சேர்ந்த முருகன் என்பவரது மகன் ரமேஷ்பாண்டியன். இவர் நேற்றிரவு தனது காரில் கோவில்பட்டி அருகில் உள்ள இலுப்பையூரணிக்கு சென்று விட்டு  திரும்பி உள்ளார். கார் இளையரசனேந்தல் சாலையில் வந்த போது, சாலையின் ஓரமாக நின்று கொண்டு இருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் சம்பவ இடத்தில் ரமேஷ்பாண்டியன் பரிதாபமாக உயிர் இழந்தார். அவருடன் காரில்  வந்த 4 பேரும் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்தும் மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் உயிரிழந்த ரமேஷ்பாண்டியன் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.