தூத்துக்குடியில் கரோனா வார்டில் இருந்து தப்பி ஓடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கரொனா வைரஸ் பாதிப்புக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுமார் 108-பேர் இன்றைய நிலவரப்படி சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 19-பேர் முழுமையாக குணமடைந்து இன்று அவர்களது வீட்டிற்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் தலைமையில் பழங்கள் வழங்கப்பட்டு வழி அனுப்பி வைக்கப்பட்டது.
அப்போது குணமடைந்தவர்களை வீட்டிற்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றிக்கொண்டு இருக்கும் போது கரோனா சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த ஒருவர் கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினார்.
அவரை சுகாதார பணியாளர்கள் மற்றும் அரசு மருத்துவமனை காவலர்கள் விரட்டி பிடித்து மீண்டும் கரொனா சிகிச்சை பிரிவில் கொண்டு ஒப்படைத்தனர். கண் இமைக்கும் நொடியில் நடந்த இந்த சம்பவத்தினால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


