

தூத்துக்குடியில் பரோட்டா கடை உரிமையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் மெயின் ரோட்டில் விசாகலட்சுமி பரோட்டா ஸ்டால் மற்றும் மட்டன் ஸ்டால் நடத்தி வருபவர் வேல்ராஜ். இவரது இளைய மகன் வாழ்வாங்கி( 27 ). இவர்கள் அ. சண்முகபுரத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் பரோட்டா கடையில் இரவு 11 மணி அளவில் பரோட்டா பொருட்களை எடுத்து கடையை பூட்டி கொண்டு கொண்டிருந்தபோது திடீரென வந்த இரண்டு பேர் வாழ்வாங்கியை அரிவாளால் வெட்டி விட்டு கல்லாவில் இருந்த பணத்தையும் கொள்ளை அடித்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.
படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வாழ்வாங்கியை தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனைக்குசெல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் துணைக் கண்காணிப்பாளர் கணேஷ் ஆகியோர் சம்பவஇடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
சம்பவம் குறித்து சம்பவம் நடந்த இடத்திற்கு எதிர்புறம் உள்ள பிரபல மசாலா கம்பெனியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து குற்றவாளிகளே தேடி வருகின்றனர். குற்றவாளிகள் முகக்கவசம் அணிந்த வண்ணம் கைகளில் வாலுடன் வந்து சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அப்பகுதியில் ஏற்கனவே நடந்த கொலை குற்றத்தில் தொடர்ச்சியாக நடந்த கொலையா அல்லது பெண் தொடர்பு காரணம் ஏதேனும் உள்ளதா அதன் காரணமாக சம்பவம் நடைபெற்று உள்ளதா என்பது போன்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.