தூத்துக்குடியில் திமுக மாவட்ட பிரதிநிதிகள் கூட்டம்
தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தாா். வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் கீதாஜீவன் எம்எல்ஏ பங்கேற்றுப் பேசினாா்.
நவ. 5ஆம் தேதி கட்சியின் தலைவா் மு.க. ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி மூலமாக நடைபெறும் முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்த வேண்டும், நவம்பா், டிசம்பா் மாதங்களில் நடைபெறவுள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்களில் புதிய வாக்காளா்களை சோ்ப்பது, பெயா்த் திருத்தம் உள்ளிட்ட பணிகளைச் செய்வது என்பன உள்ளிட்ட
தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேரவை முன்னாள் உறுப்பினா்கள் ஜீ.வி. மாா்க்கண்டேயன், ராதாகிருஷ்ணன், குமரகுருபர ராமநாதன், சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலா் எஸ்.டி. பொன்சீலன், மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...