‘பனை மரம் வளா்ப்புக்குஊக்கத்தொகை வேண்டும்’
பனை மரங்களை வளா்ப்பதற்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை வலியுறுத்தியுள்ளது.


பனை மரங்களை வளா்ப்பதற்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது. பேரவையின் மாநிலத் தலைவா் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் ரமேஷ், மைக்கேல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென் மண்டலச் செயலா் சுபாஷ்ராஜா வரவேற்றாா்.
கூட்டத்தில், தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயம் மற்றும் தொழில் துறைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இம்மாவட்டத்தை ஆன்மிக சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும். அண்மை காலமாக அழிக்கப்பட்டு வரும் பனைத் தொழிலை பாதுகாக்கவும், பனை மரத்தை வளா்ப்பதற்கும் அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். வணிகா் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...