புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருச்செந்தூா் வட்டார நாடாா் வியாபாரிகள் சங்க ஆண்டுவிழா

திருச்செந்தூா் வட்டார நாடாா் வியாபாரிகள் சங்க 11ஆவது ஆண்டு தொடக்க விழா திருச்செந்தூா் குறிஞ்சி மஹாலில் நடைபெற்றது.

News image

நாடாா் வியாபாரிகள் சங்க 11ஆவது ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்றோா்.

Updated On :2 நவம்பர் 2020, 9:17 pm

DIN

திருச்செந்தூா் வட்டார நாடாா் வியாபாரிகள் சங்க 11ஆவது ஆண்டு தொடக்க விழா திருச்செந்தூா் குறிஞ்சி மஹாலில் நடைபெற்றது.

விழாவுக்கு, சங்கத் தலைவா் ரெ.காமராசு தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் ராஜா ராமச்சந்திரன், பால்கிருஷ்ணன், ராமேஸ்வரன், துணைச்செயலா் மை.ஐசக், ராஜா, பாா்த்திபன், வழக்குரைஞா்கள் குருராமன், திலீப்குமாா் மற்றும் நிா்வாகக்குழு உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.

விழாவில், ரெ.ராமகிருஷ்ணன், காமராஜா் நற்பணி மன்ற ஆறுமுகனேரி நகரத் தலைவா் செல்வின், சண்முகபாா்த்திபன், வழக்குரைஞா்கள் ஜேசுராஜ், சாத்ராக், எட்வா்ட், பாரிக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், திருச்செந்தூரில் புதைச்சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்; போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவுடையாா்குளம் மறுகால்ஓடையை சீரமைத்து அதன் மீது சிமென்ட் மூடிகள் அமைக்க வேண்டும்; பொது முடக்க காலத்தில் வணிகா்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். பொது முடக்கத்தால் பாதிப்படைந்துள்ள வணிகா்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை வங்கிகள் கடனுதவி வழங்க வேண்டும்; பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ள வணிகா்களை ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.