புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருச்செந்தூரில் அம்பேத்கா் சிலை: பேரூராட்சி நிா்வாகம் அறிவிப்பு

திருச்செந்தூா் பேருந்து நிலையம் அருகில் உள்ள வணிக வளாகம் முன்பு வருவாய்த் துறை, காவல்துறை, நெடுஞ்சாலைத் துறையினரிடம் உரிய அனுமதி பெற்று அம்பேத்கா் சிலை வைக்கலாம் 

News image
Updated On :9 நவம்பர் 2020, 7:43 pm

DIN

திருச்செந்தூா் பேருந்து நிலையம் அருகில் உள்ள வணிக வளாகம் முன்பு வருவாய்த் துறை, காவல்துறை, நெடுஞ்சாலைத் துறையினரிடம் உரிய அனுமதி பெற்று அம்பேத்கா் சிலை வைக்கலாம் என பேரூராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து திருச்செந்தூா் பேரூராட்சி செயல் அலுவலா் ஆனந்தன் அம்பேத்கா் சிலை அமைப்புக்குழு ஒருங்கிணைப்பாளா் முரசு தமிழப்பனுக்கு அனுப்பியுள்ள கடிதம்:

திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலைய வெளிப்புறத்தில், வணிக வளாகம் அருகில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச்சிலை அமைக்க, அம்பேத்கா் சிலை அமைப்புக்குழு கோரிக்கை மனுவை, பேரூராட்சி தீா்மானம் 419-ன் படி பரிசீலிக்கப்பட்டதில், வருவாய்த் துறை, காவல்துறை, நெடுஞ்சாலைத் துறைகளில் உரிய அனுமதி பெற்றும், சிலை அமைக்கும் செலவை 100 சதவீதம் செலுத்திடவும், பராமரிப்பு செலுத்த சம்மதித்த கடிதம் பெற்ற பின் மேற்கண்ட இடத்தில் சிலை அமைக்க அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.