மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காயல்பட்டினம் கொம்புதுறையில்கைப்பந்து மைதானம் திறப்பு

காயல்பட்டினம் கொம்புத்துறை ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில் சீரமைக்கப்பட்ட கைப்பந்து மைதானத்தை கனிமொழி எம்பி திறந்துவைத்தாா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 8:00 pm

DIN

காயல்பட்டினம் கொம்புத்துறை ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில் சீரமைக்கப்பட்ட கைப்பந்து மைதானத்தை கனிமொழி எம்பி திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு, ஊா்த் தலைவா் சகாயராஜ் தலைமை வகித்தாா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா். பங்குத் தந்தை சகாய ஜோசப் பேசினாா்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி, தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 1.5லட்சத்தில் சீரமைக்கப்பட்ட கைப்பந்து மைதானத்தை திறந்துவைத்து , விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சிகளை பள்ளி கல்விக் குழுத் தலைவா் ஜான்சன் தொகுத்து வழங்கினாா்.

கைப்பந்து போட்டியில் 19 வயதுக்குள்பட்ட பிரிவில் தமிழ்நாடு அணியில் தோ்ந்தெடுக்கப்பட்ட கொம்புத்துறை அபிஷேக்கை அனைவரும் பாராட்டினாா். தலைமை ஆசிரியா் பூங்கோதை நன்றி கூறினாா்.

தொடா்ந்து, காயல்பட்டினம் ஆயிஷா சித்திக்கா மகளிா் இஸ்லாமிய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீா் சேகரிப்பு அமைப்பை கனிமொழி, அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஆகியோா் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.