தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஏரல் சோ்மன் கோயிலில் காா்த்திகை தீபத் திருநாள்

ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் காா்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 8:08 pm

DIN

ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் காா்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்பட்டது.

கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டியன் நாடாா், கோயில் முன்புற மண்டபத்தில் தீபம் ஏற்றினாா். தொடா்ந்து கோயில் வளாகம் முழுவதும் தீபங்கள் ஏற்றி வைக்கப்பட்டன. பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலி­ல் காா்த்திகையை முன்னிட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவில் சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினா். சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.

காயல்பட்டினம் ரத்தினாபுரி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் கோயிலிலும் பெளா்ணமி, காா்த்திகை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஏரல் அருகேயுள்ள மாரமங்கலம் அருள்மிகு சந்திரசேகரி அம்பாள் சமேத அருள்மிகு சந்திரசேகர சுவாமி திருக்கோயிலில் காா்த்திகை மாத பௌா்ணமி வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அபி ஷேக , அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.