அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நாசரேத் பகுதியில் குரங்குகள் அட்டகாசம்

நாசரேத் பகுதியில் அட்டகாசம் செய்து வரும் குரங்கை வனத்துறையினா் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 7:30 pm

DIN

நாசரேத் பகுதியில் அட்டகாசம் செய்து வரும் குரங்கை வனத்துறையினா் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாசரேத் பகுதியில் கடந்த ஒரு வாரமாக இரு குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அவை, திறந்திருக்கும் வீடுகளுக்குள் புகுந்து பொருள்களை எடுத்து செல்வதுடன் உணவுப் பொருள்களையும் சேதப்படுத்தி வருகிறது.

குறிப்பாக, என்டிஎன் தெரு, ஞானராஜ் தெரு உள்ளிட்ட தெருக்களில் அடிக்கடி உலா வரும் குரங்குகள், குழந்தைகளையும் பெண்களையும் அச்சுறுத்துகின்றன. கடைகளுக்குள் புகுந்து பொருள்களை சிதறிப் போடுகின்றன என வியாபாரிகள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே, குரங்குகளைப் பிடித்து வனப்பகுதியில் கொண்டுவிட வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.