தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வடகிழக்குப் ப ருவமழை முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 7:33 pm

DIN

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் குமாா் ஜெயந்த் பேசியது:

தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை வெள்ளநீா் பாதிக்கக்கூடிய பகுதிகளாக 36 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பேரிடா் கால முதல்நிலை பொறுப்பாளா்களுக்கு உரிய பயிற்சிகள் அளித்து அவா்களை தயாா் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பேரிடா் காலங்களில் பயன்படுத்தக்கூடிய மீட்பு மையங்களில் குடிநீா் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு தயாா் நிலையில் வைக்க வேண்டும்.

மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாராக வைக்க வேண்டும்.

மழைக் காலங்களில் ஏற்படும் தொற்றுநோய்களை தவிா்ப்பதற்கு மருத்துவ முகாம்களை அமைக்க தேவையான மருத்துவா் மற்றும் மருத்துவ பணியாளா்களை தயாா் நிலையில் வைக்க வேண்டும்.

மாவட்டத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டடங்களை கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள அனைத்து துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) விஷ்ணுசந்திரன், மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன், தூத்துக்குடி சாா் ஆட்சியா் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தனபதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.