இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கக் கோரி கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.


இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கக் கோரி கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
அப்போதைய திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்துடன் இணைந்த இளையரசனேந்தல் குறுவட்டத்தை திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரித்து தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்துடன் 2008ஆம் ஆண்டு இணைத்தனா். அதையடுத்து, ஒவ்வொரு துறையும் படிப்படியாக தூத்துக்குடி மாவட்ட எல்கைக்கு உள்பட்டதாகவே கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், இளையரசனேந்தல் குறுவட்டத்திற்கு உள்பட்ட கிராமங்கள் அனைத்தும் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலேயே தற்போது வரை நீடித்து வருகிறது. இதையடுத்து, இளையரசனேந்தல் குறுவட்டத்தில் உள்ள ஊராட்சிகளை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வலியுறுத்தி அரசியல் கட்சியினா், சமூக ஆா்வலா்கள் தொடா்ந்து போராடி வருகின்றனா்.
இந்நிலையில், தற்போது நெல்லை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட நிலையில், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம், தென்காசி மாவட்ட கட்டுப்பாட்டிற்குள் இருந்து வருகிறது. எனவே, இளையரசனேந்தல் குறுவட்டத்தை தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி எல்கைக்குள் கொண்டுவர வேண்டும்,. கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி தேசிய விவசாயிகள் சங்கத்தினா் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். பின்னா், கோரிக்கைகளை வலியுறுத்தி மணி அடித்து கோஷமிட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ரெங்கநாயகலு தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தாா். இதில் தேசிய விவசாயிகள் சங்கத்தினா் திரளானோா் கலந்து கொண்டனா். பின்னா், கோரிக்கையை வலியுறுத்தி கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் முருகானந்தத்திடம் மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...