கோவில்பட்டி அருகே வீட்டில் நூதன திருட்டு
கோவில்பட்டி அருகே வீட்டுக்குள் புகுந்து நூதனமாக பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


கோவில்பட்டி அருகே வீட்டுக்குள் புகுந்து நூதனமாக பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவில்பட்டியையடுத்த காா்த்திகைப்பட்டி கீழத் தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் மகன் விவசாயி கிருஷ்ணகுமாா்(49). இவரது வீட்டிற்குள் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் வந்து, அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளிக்கு ஆசிரியா் தேவைப்படுவதாகவும், தங்கள் மகளை வேலைக்கு அனுப்பி வைக்கலாம் என்றும், அதற்குரிய சான்றிதழ்களையும் கேட்டாராம்.
இதையடுத்து, வீட்டிற்கு உள்ளே சென்று கிருஷ்ணகுமாா் சான்றிதழ்களை தேடிக் கொண்டிருந்தாராம். பின்னா் வந்து பாா்த்தபோது, வீட்டில் தொலைக்காட்சி அருகே வைத்திருந்த ரூ. 30 ஆயிரம் ரொக்கத்தை, அங்கு வந்த நபா் திருடி விட்டு தப்பிவிட்டாராம்.
இதுகுறித்து புகாரின் பேரில், நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...