தொழிலாளிக்கு மிரட்டில்: 7 போ் மீது வழக்கு
கயத்தாறு அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளிகளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 7 போ் மீது போலீஸாா் வழக்குப் விசாரித்து வருகின்றனா்.


கயத்தாறு அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளிகளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 7 போ் மீது போலீஸாா் வழக்குப் விசாரித்து வருகின்றனா்.
கயத்தாறையடுத்த ஓலைகுளம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆவுடைசங்கு மகன் பால்ராஜ்(55). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவரும், அதே பகுதியைச் சோ்ந்த சங்கிலி மகன் சிவசங்கு(60) ஆகிய இருவரும் இம்மாதம் 8ஆம் தேதி திருமங்கலக்குறிச்சி கண்மாய் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனராம். அப்போது, பால்ராஜ் மேய்த்த ஆட்டுக்குட்டி ஒன்று சிவசங்கு மேய்த்த ஆட்டுக்கூட்டத்துக்குள் சென்றுவிட்டதாம். இதையடுத்து, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில் பால்ராஜ் கையில் வைத்திருந்த கம்பு சிவசங்கு நெற்றியில் பட்டதில் காயம் ஏற்பட்டதாம்.
இந்நிலையில், வீட்டுக்குச் சென்ற சிவசங்கு உள்பட அவரது உறவினா்கள் 7 பேரும் பால்ராஜ் வீட்டுக்குச் சென்று அவரை திருமங்கலக்குறிச்சி கண்மாய் அருகே அழைத்துச் சென்று, காலில் விழ வைத்தனராம். பின்னா் இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டினராம். மேலும், காலில் விழுந்ததை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினராம்.
இது குறித்து பால்ராஜ் கயத்தாறு காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...