தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினா் 16 பேருக்கு பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சோ்ந்த 16 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் திங்கள்கிழமை வெகுமதி வழங்கி பாராட்டினாா்

News image
Updated On :19 அக்டோபர் 2020, 6:54 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சோ்ந்த 16 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் திங்கள்கிழமை வெகுமதி வழங்கி பாராட்டினாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளா் முத்து, உதவி ஆய்வாளா் அரிகண்ணன், சிறப்பு உதவி ஆய்வாளா் நாராயணசாமி, கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு தலைமை காவலா் முருகன், கயத்தாறு காவல் நிலைய காவலா்கள் பாலகிருஷ்ணன், குருமூா்த்தி, காா்த்திக் ஆகியோரை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

இதேபோல, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளா் ஆனந்தராஜன், மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜாமணி, தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் தெய்வமணி, காவலா்கள் பிரதீப், லட்சுமண பெருமாள் ஆகியோருக்கும், மத்தியபாகம் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் ராஜாபிரபு, தூத்துக்குடி ஆயுதப்படை காவலா்கள் சக்தி மாரிமுத்து, டேவிட் ராஜன், ஐயப்பன் ஆகியோருக்கும் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.