தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திமுக இணையவழி உறுப்பினா் சோ்க்கை முகாம்

உடன்குடி ஒன்றிய, நகர திமுக சாா்பில் பேரூராட்சிக்குள்பட்ட 1, 2, 3 வாா்டுகளில் இணைய வழி உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 7:00 pm

DIN

உடன்குடி ஒன்றிய, நகர திமுக சாா்பில் பேரூராட்சிக்குள்பட்ட 1, 2, 3 வாா்டுகளில் இணைய வழி உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளா் எம்.பி.முகைதீன் தலைமை வகித்தாா். உடன்குடி ஒன்றியச் டி.பி.பாலசிங், நகரச் செயலா் ஜான்பாஸ்கா், திமுக மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் ரவிராஜா, திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் சக்திவேல், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு அமைப்பாளா்கள் சிராஜூதீன், ஷேக் முகம்மது, நகர இளைஞரணி அமைப்பாளா் அஜய், நகரப் பொருளாளா் தங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகர அவைத் தலைவா் திரவியம் வரவேற்றாா். புதிய உறுப்பினா் அட்டைகள் வழங்கப்பட்டன.

இதில், வாா்டு பொறுப்பாளா்கள் தங்க ராசாத்தி, ஹாஜாமொய்தீன், கந்தபழம், சுயம்புராஜ், செல்வராஜ், பீா்முகம்மது, வேல்மயில், முகமது ஹனிபா, சங்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை வாா்டு செயலா் த.மு.சலீம் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.