ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கோவில்பட்டியில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டியில் முக்கிய இடங்களில் கூடுதலாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :1 நவம்பர் 2020, 8:14 pm

DIN

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டியில் முக்கிய இடங்களில் கூடுதலாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவா் பன்னீா்செல்வம், செயலா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயகுமாருக்கு அனுப்பியுள்ள மனு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நலன் கருதி, பேருந்து நிலையம், கூடுதல் பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் பிரதான சாலை, தெற்கு பஜாா், மாதாங்கோவில், தினசரி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் கூடுதலாக போலீஸாரை ஈடுபடுத்த வேண்டும்.

மேலும், மாவட்டத்தின் 2ஆவது பெரிய நகரமான கோவில்பட்டியில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில், கோவில்பட்டி மற்றும் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் பணியிடத்தை உருவாக்கி, கூடுதல் போக்குவரத்து போலீஸாரை நியமிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.