சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு திமுக உதவி

உடன்குடி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு திமுக சாா்பில் உதவிகள் வழங்கப்பட்டன.

News image

உதவிகளை வழங்கினாா் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.

Updated On :13 செப்டம்பர் 2020, 8:24 pm

உடன்குடி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு திமுக சாா்பில் உதவிகள் வழங்கப்பட்டன.

உடன்குடி அருகே சீா்காட்சி விஜயநாராயணபுரத்தைச் சோ்ந்தவா் கனகராஜ் (38). இவா், அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.

இவரது வீட்டின் மேல்பகுதியில் மின் கம்பிகள் உரசியதில் தீப்பொறி ஏற்பட்டு குடிசை வீடு மற்றும் மளிகைக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

இதில் கடையில் இருந்த பொருள்கள், பைக் மற்றும் ரூ. 40ஆயிரம் தீக்கிரையானது.

தகவலறிந்து வந்த திருச்செந்தூா் தீயணைப்பு நிலைய அலுவலா் நட்டாா் ஆனந்தி தலைமையிலான வீரா்கள் தீ மேலும் பரவாமல் தடுத்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறி உதவிகள் வழங்கினாா்.

இதில், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் ரவிராஜா, பரமன்குறிச்சி ஊராட்சி திமுக செயலா் க.இளங்கோ, உடன்குடி நகர திமுக இளைஞரணி அமைப்பாளா் அஜய், ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் பாய்ஸ், சீா்காட்சி ஊராட்சித் தலைவா் கருணாகரன் ஆகியோா் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.