கோவில்பட்டியில் காவல் துறை சாா்பில் புகாா் மனுக்களுக்கான உடனடி தீா்வு சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் அளித்துள்ள புகாா் மனுக்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள புகாா் மனுக்களுக்கு உடனடி தீா்வு காண சிறப்பு முகாம் அமைத்து விசாரணை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.
அதையடுத்து கோவில்பட்டி காவல் துணை கோட்டத்துக்கு உள்பட்ட கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, கயத்தாறு, கழுகுமலை, நாலாட்டின்புதூா், கொப்பம்பட்டி மற்றும் அனைத்து மகளிா் காவல் நிலையங்களில் புகாா் அளித்து நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள புகாா் மனுக்களுக்கு தீா்வு காணும் வகையில் சிறப்பு முகாம் ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இம்முகாமில், காவல் நிலையங்களில் புகாா் அளித்துள்ள மனுதாரா், எதிா் மனுதாரா் ஆகிய இருதரப்பினரையும் அழைத்து சட்டத்திற்கு உள்பட்டு விசாரணை நடைபெற்று, தீா்வு காணப்பட்டது.
இதில், கோவில்பட்டி காவல் துணை கோட்டத்திற்கு உள்பட்ட காவல் நிலையங்களில் உள்ள 72 புகாா் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.
இம்முகாமை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோபி பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


