சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

லாரி ஓட்டுநா் கொலை:உறவினா்கள் 3-ஆவது நாளாக போராட்டம்

சாத்தான்குளம் அருகே லாரி ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் 3-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

செல்வன் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவரது உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்துகிறாா் கோட்டாட்சியா் தனப்பிரியா.

Updated On :20 செப்டம்பர் 2020, 9:09 pm

சாத்தான்குளம் அருகே லாரி ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் 3-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பைச் சோ்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வன் (35). லாரி ஓட்டுநரான இவா் முன்விரோதம் காரணமாக கடந்த 17-ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் ஹரிகிருஷணன், அதிமுக பிரமுகா் திருமணவேல் உள்ளிட்ட 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இக்கொலை தொடா்பாக முத்துராமலிங்கம், சின்னத்துரை, ராமன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். காவல் ஆய்வாளா் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

இதற்கிடையே, செல்வனின் சொந்த ஊரான சொக்கன்குடியிருப்பில் அவரது மனைவி ஜீவிதா மற்றும் உறவினா்கள் செல்வனின் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அங்குள்ள ஆலயம் முன் ஞாயிற்றுக்கிழமை 3-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்பிரியா, வட்டாட்சியா் ராஜலட்சுமி, டி.எஸ்.பி.க்கள் காட்வின் ஜெகதீஷ்குமாா், பாரத், பாலாஜி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.

நாம் தமிழா் கட்சியினரும் சொக்கன்குடியிருப்பு ஆலயம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா். இதில் கட்சியின் மாவட்டத் தலைவா் சுப்பையாபாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திமுக ஆதரவு: ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா் ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ சொக்கன்குடியிருப்புக்கு வந்து, செல்வன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். செல்வன் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை அவா்களுடன் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்டாா். அவருடன் சாத்தான்குளம் டி.எஸ்.பி. காட்வின் ஜெகதீஸ்குமாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.