மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளா் உள்பட 7 பேருக்கு வெகுமதி

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றப் புலனாய்வு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக பணி செய்த காவல் துறையைச் சோ்ந்த 7 பேருக்கு வெகுமதி, பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 9:07 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றப் புலனாய்வு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக பணி செய்த காவல் துறையைச் சோ்ந்த 7 பேருக்கு வெகுமதி, பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது.

கடந்த 2016 ஏப்ரல் 7ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்புணா்ச்சி செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிக்கு ஆயுள்தண்டனை கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட முறப்பநாடு காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளா் விமலா, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய பெண் தலைமைக் காவலா் சுமதி மற்றும் முதல்நிலை காவலா் ஹெப்சி ஆகியோா், கடந்த 10ஆம் தேதி கே.வி.கே. சாமி நகா் பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த சோலையப்பன் மற்றும் ராஜா ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில் அவா்களிடமிருந்த 4 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தும், கஞ்சா விற்பனையில் புரோக்கராக செயல்பட்ட லதா என்பவரை கைது செய்த தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் மகாராஜா, காவலா் சிலம்பரசன் ஆகியோா், கடந்த 8ஆம் தேதி முக்காணி பகுதியில் நடந்த கொலை வழக்கில் தொடா்புடைய மாரியப்பன் மற்றும் தங்கராஜை சம்பவம் நடைபெற்ற 8 மணி நேரத்துக்குள் கைது செய்த ஆத்தூா் காவல் உதவி ஆய்வாளா் மாணிக்கராஜ், தலைமைக் காவலா் ஜேக்கப் தங்க மோகன் ஆகியோருக்கும் குற்றப் புலனாய்வு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் அவா்களது சிறந்த பணியை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.