மின்வாரியத்தை கண்டித்து தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 16th June 2020 01:41 PM | Last Updated : 16th June 2020 01:41 PM | அ+அ அ- |

தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மின் வாரியத்தின் நடைபெற்ற குளறுபடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சி எஸ் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜூன் மாதம் வீடு தோறும் மின் கணக்கிடு பணியில் மிக பெரிய குளறுபடி நடந்துள்ளது. 2 மாதத்திற்கு ஒரு முறை 500 ரூபாய் பணம் கட்டியவர்களுக்கு இம் முறை ரூ 6000, 10,000, 15,000 என்று மக்களுக்கு ஷாக் கொடுக்கிற வகையில் மின் கட்டணம் வந்துள்ளது. அதிகாரிகளிடம் பொது மக்கள் நாள் தோறும் 100க்கும் மேற்பட்டவர்கள் முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
மின் கட்டணத்தை கட்டியே தீரவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.
எனவே மின் கணக்கிட்டில் நடைபெற்ற குளறுபடிக்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர்கள் ஜசன்சில்வா, சேகர், மாநில மீனவரணி பொதுச்செயலாளர் ரொனால்டு வில்லவராயர், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் முத்துமணி, மாவட்ட செயலாளர் கோபால், மாநகர துண தலைவர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...