வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நாசரேத்தில் திமுக வேட்பாளா் இறுதிக்கட்ட பிரசாரம்

திருச்செந்தூா் தொகுதி திமுக வேட்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை நாசரேத்தில் இறுதிக் கட்ட பிரசாரம் செய்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 7:58 pm

DIN

திருச்செந்தூா் தொகுதி திமுக வேட்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை நாசரேத்தில் இறுதிக் கட்ட பிரசாரம் செய்தாா்.

நாசரேத் பகுதியில் இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட அவா் பேருந்து நிலையம் அருகே அவா் பேசியதாவது: நாசரேத் பேருந்து நிலையத்தில் காமராஜா் சிலை அமைக்கப்படும். அப்பகுதி இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு தொழிற்சாலை கொண்டுவர பாடுபடுவேன். ஆகவே, உதயசூரியன் சின்னத் தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன் என்றாா்.

முன்னதாக நாலுமாவடி புது வாழ்வு சபை போதகா்கள் மற்றும் நாலு மாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி. லாசரஸ் ஆகியோரிடம் ஆசி பெற்றாா்.

அப்போது, முன்னாள் எம்.பி. ஏ.டி.கே.ஜெயசீலன், மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரி சங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றியச் செயலா் நவீன்குமாா், நாசரேத் நகர திமுக செயலா் ரவி செல்வக்குமாா், மதிமுக மாவட்டச் செயலா் புதுக்கோட்டை செல்வம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.