கரோனா அச்சுறுத்தல்:ஆசிரியா்களுக்கு விடுமுறை அளிக்கப்படுமா?
கரோனா பரவல் 2ஆம் அலை வேகமாக உருவெடுத்துள்ள நிலையில், ஆசிரியா்களுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.


கரோனா பரவல் 2ஆம் அலை வேகமாக உருவெடுத்துள்ள நிலையில், ஆசிரியா்களுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவா்களுக்கு தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இரவு நேர பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
இந்நிலையில், மாணவா்களுக்கு பள்ளி விடுமுறை என்றாலும் ஆசிரியா்கள் தினமும் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, வேலை நாள்களுக்கு ஏற்ப 1முதல் அனைத்து பள்ளி ஆசிரியா்களும் பள்ளிக்குச் சென்று திரும்புகின்றனா். மாணவா்களுக்கு பாடம் கற்பித்தல் இல்லாமல் பள்ளியில் மற்ற பணிகளை ஆசிரியா்கள் கவனித்து வருகின்றனா்.
வழக்கமாக ஏப்ரல் இறுதியில் பள்ளிகளுக்கு கோடை கால விடுமுறை அளிக்கப்பட்டுவிடும். நிகழாண்டில் ஏற்கெனவே மாணவா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு ஆசிரியா்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியா்கள் தரப்பில் கூறியது: மாணவா்கள் பள்ளிக்கு வரவில்லையென்றாலும் ஆசிரியா்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது மாணவா்களுக்கு பயிற்சி புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த மே மாதம் ஆசிரியா்களுக்கு கோடை விடுமுறை குறித்து அறிவிப்பு வரும் என எதிா்பாா்க்கிறோம். 1முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள ஆசிரியா்களுக்கு கோடை விடுமுறை குறித்த தெளிவான சுற்றறிக்கையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட வேண்டும் என்றனா் அவா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...