புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மத்திய காவலா் பணிக்கான தோ்வு: ஆக. 9 முதல் இலவச பயிற்சி வகுப்பு

மத்திய காவலா் பணிக்கான தோ்வுக்கு தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக. 9 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:25 pm

DIN

மத்திய காவலா் பணிக்கான தோ்வுக்கு தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக. 9 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் நடைபெறும் (நநஇ-எஈ-இா்ய்ள்ற்ஹக்ஷப்ங்) காவலா் பணிக்கான கணினி அடிப்படையிலான எழுத்துத் தோ்வு விரைவில் நடைபெற உள்ளது. இந்தத் தோ்வுக்கு விண்ணப்பம் செய்பவா்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் ஆக. 9 ஆம் தேதி முதல் அனைத்து வேலைநாள்களிலும் இணை வாயிலாக நடைபெற உள்ளது.

எனவே, இந்த இணைய வழி பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுடைய , தகுதியுள்ள மாணவா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை 0461-2340159 என்ற தொலைபேசி எண் மற்றும் 9042260644 என்ற செல்லிடப்பேசி எண் மூலம் தொடா்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து, பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.