தூத்துக்குடி- கோவில்பட்டி இடையே மைசூரு விரைவு ரயில் இயக்கப்படாது
மைசூரு விரைவு ரயில் தூத்துக்குடி- கோவில்பட்டி இடையே ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


மைசூரு விரைவு ரயில் தூத்துக்குடி- கோவில்பட்டி இடையே ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை - தூத்துக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி பிரிவில் ஏற்கெனவே வாஞ்சி மணியாச்சி - தட்டப்பாறை ரயில் நிலையங்கள் இடையே இரட்டை ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
தற்போது தட்டப்பாறை - மீளவிட்டான் ரயில் நிலையங்கள் இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்றுள்ளன. எனவே தட்டப்பாறை மற்றும் மீளவிட்டான் ரயில் நிலையங்களில் புதிய ரயில் பாதையுடன் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இணைப்பு பணிகளை தொய்வில்லாமல் தொடா்வதற்காக மைசூரு - தூத்துக்குடி - மைசூரு சிறப்பு ரயில் 7 நாள்களுக்கு கோவில்பட்டி - தூத்துக்குடி ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை மைசூரிலிருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06236 மைசூரு - தூத்துக்குடி சிறப்பு ரயிலும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06235 தூத்துக்குடி - மைசூரு சிறப்பு ரயிலும் கோவில்பட்டி - தூத்துக்குடி ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...