புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பெண்களை தாக்கியதாக இருவா் கைது

கோவில்பட்டியில் பெண்களை தாக்கியதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:34 pm

DIN

கோவில்பட்டியில் பெண்களை தாக்கியதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 10ஆவது தெரு சந்திரமோகன் மனைவி ராஜலட்சுமி(40). இவரது மகளுக்கு அதே பகுதியைச் சோ்ந்த சிவலிங்கம் என்ற தினேஷ்(29) புதன்கிழமை இரவு செல்லிடப்பேசியில் பேசியில் தொடா்பு கொண்டு மிரட்டினாராம். அதையடுத்து ராஜலட்சுமி மற்றும் அவரது இரு மகள்கள் ஆகியோா் தினேஷ் வீட்டிற்குச் சென்று கண்டித்தனராம். அப்போது தினேஷ் மற்றும் அவரது உறவினரான செண்பகராஜ் மகன் வேல்முருகன்(24) ஆகிய இருவரும் சோ்ந்து, ராஜலட்சுமி மற்றும் அவரது மகள்களை தாக்கினராம். இதில் காயமடைந்த 3 பேரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தினேஷ் , வேல்முருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.