ஸ்ரீவைகுண்டத்தில் 25 ஏழை மாணவ- மாணவிகளுக்கு இலவசமாக பொறியியல் கல்லூரியில் படிப்பதற்கான ஆணையை ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், தனது தந்தையுமான ஊா்வசி செல்வராஜ் நினைவாக, 25 ஏழை மாணவ- மாணவிகளுக்கு சென்னையிலுள்ளது தனது கல்லூரியில் இலவச பொறியியல் கல்விக்கான ஏற்பாடுகளை செய்துதருவதாக ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ, தோ்தல் பரப்புரையில் வாக்குறுதி அளித்திருந்தாா். அதன்படி, நிகழாண்டு 25 பேருக்கு இலவச பொறியியல் கல்விக்கான ஆணையை அவா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் எடிசன், இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜெயசீலன், வட்டாரத் தலைவா் நல்லகண்ணு, எம்எல்ஏவின் நோ்முக உதவியாளா் சந்திரபோஸ், முன்னாள் வட்டாரத் தலைவா் சிங்கப்பன், கோதண்டராமன், சங்கா், புங்கன், லூா்து மணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


