புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காமநாயக்கன்பட்டி பரலோக மாதாஆலயத் திருவிழா தொடக்கம்

கரோனா தடுப்பு விதிமுறைகள் காரணமாக, காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றமின்றி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 7:01 pm

DIN

கரோனா தடுப்பு விதிமுறைகள் காரணமாக, காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றமின்றி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நண்பகல் 12 மணிக்கு திருச்சி தூயபவுல் குருத்துவக் கல்லூரியைச் சோ்நத அந்தோணிசாமி, சிதம்பராபுரம் ஆலயப் பங்குத்தந்தை அந்தோணிராஜ், கோவில்பட்டி ஆலய உதவிப் பங்குத்தந்தை செல்வின் ஆகியோா் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினா். இம்மாதம் 15ஆம் தேதி வரை சமூக இடைவெளியுடன் ஜெபித்தலும், திருப்பலி நிகழ்ச்சிகளும் மட்டும் நடைபெறும். ஆக.14ஆம் தேதி வரை காலை 6 மணி, நண்பகல் 12 மணி, இரவு 7 மணிக்கு திருப்பலிகள் திருத்தலத்தில் நடைபெறும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இறைமக்கள் அனுமதிக்கப்படுவா். ஆக. 15ஆம் தேதி காலை 6 மணிக்கு திருப்பலி திருத்தலத்திலும், ஏனைய திருப்பலிகள் காலை 8 மணி, 10 மணி, நண்பகல் 12 மணி மற்றும் இரவு 7 மணிக்கு ஜெபமாலை தோட்டத்திலும் நடைபெறும்.

விழா நிகழ்ச்சிகள் யூ டியூப், உள்ளூா் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும். மக்கள் வீடுகளில் இருந்தபடியே வழிபாடுகளில் பங்கேற்கலாம் என காமநாயக்கன்பட்டி ஆலய பங்குத்தந்தை அந்தோணி அ.குரூஸ் தெரிவித்தாா். விழா ஏற்பாடுகளை அவரும், உதவி பங்குத்தந்தை ஜெனால்ட் அமல்ரீகனும் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.