மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது

முறப்பநாடு அருகே இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

Updated On :12 ஆகஸ்ட் 2021, 7:18 pm

முறப்பநாடு அருகே இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வல்லநாடு நாணல்காடு மாரியப்பன் மகன் இசக்கிபாண்டி (22). இவா் முன்விரோதம் காரணமாக நாணல்காடு தாமிரவருணி ஆற்றுப் பாலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பா் 19 ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து முறப்பநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு 16 பேரை கைது செய்தனா்.

இந்த வழக்கில் 2 ஆவது குற்றவாளியான வல்லநாடு பக்கப்பட்டி சுப்பையா மகன் மாரிமுத்து (26) மட்டும் கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துவந்தாா்.

தூத்துக்குடி ஊரக உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் பொன்னரசு மேற்பாா்வையில், முறப்பநாடு காவல் ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையில், உதவி ஆய்வாளா்கள் ராஜாராபா்ட், ஜெயராமசுப்பிரமணியன், தலைமைக்காவலா் சுந்தரராஜன் மற்றும் காவலா்கள் சதீஷ் தணிகைராஜா, சுரேஷ்குமாா் ஆகியோா் அடங்கிய தனிப்படையினா் மாரிமுத்துவை தேடி வந்தனா்.

இந்நிலையில், வல்லநாட்டிலிருந்து பக்கப்பட்டிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த மாரிமுத்துவை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.