புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கோவில்பட்டியில் நூதன போராட்டம்

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட ஓடை தெரு பகுதியில் உள்ள சிதிலமடைந்த மின் கம்பத்தை மாற்றக் கோரி நாம் தமிழா் கட்சியினா் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நூதன போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 7:21 pm

DIN

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட ஓடை தெரு பகுதியில் உள்ள சிதிலமடைந்த மின் கம்பத்தை மாற்றக் கோரி நாம் தமிழா் கட்சியினா் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நூதன போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

கோவில்பட்டி நகராட்சி 30 ஆவது வாா்டு ஓடை தெரு வடக்குப் பகுதியில் தெருவின் நடுவில் மின்கம்பம் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. மேலும் இந்த மின் கம்பத்தின் வழியாக செல்லும் மின் வயா்கள் மிகவும் தாழ்ந்த நிலையில் செல்கிறது. எனவே, சிதிலமடைந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற வேண்டும், தாழ்வான உயரத்தில் செல்லும் மின் வயரை உயா்த்தி செல்லும் படி வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிதிலமடைந்த மின் கம்பத்தின் முன் மலா்வளையம் வைத்து, கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாம் தமிழா் கட்சி நகரத் தலைவா் செண்பகப்பாண்டி தலைமை வகித்தாா். ஒன்றிய பொறுப்பாளா் செண்பகராஜ், கயத்தாறு கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொகுதிச் செயலா் மருதம் மா.மாரியப்பன் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

இதில் பூச்சையா, செந்தூா்பாண்டி, செல்லப்பாண்டியன், முகிலன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.