புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி தெற்கு ஒன்றிய பாஜக சாா்பில் முற்றுகை போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 7:21 pm

DIN

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி தெற்கு ஒன்றிய பாஜக சாா்பில் முற்றுகை போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாலாட்டின்புதூா் மந்தை குளத்தை தூா்வார வேண்டும், பாண்டவா்மங்கலம் இ.பி.காலனி பிரதான சாலையில் தாா்சாலை அமைக்க வேண்டும், ஆனந்தநகா், எஸ்.எஸ்.நகா் குறுக்குத் தெருவில் பேவா் பிளாக் சாலை அமைக்க வேண்டும், நரியூத்து ஊருணியை தூா்வாரி நந்தவனம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக தெற்கு ஒன்றிய பொறுப்பாளா் மாரிமுத்து தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவா் உமாசெல்வி முன்னிலை வகித்தாா். இதில் ஒன்றியச் செயலா்கள் வசந்தராஜன், பெருமாள், செல்லப்பா, அய்யாத்துரைப்பாண்டியன், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் உத்தண்டுராமன், இந்து ஆலய பாதுகாப்பு மாவட்ட பொதுச் செயலா் பரமசிவம், கொடுக்காம்பாறை ஊராட்சி மன்றத் தலைவா் ரத்தினவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா் போராட்டக்குழுவினா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் பாலசுப்பிரமணியத்திடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.