புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விளாத்திகுளம், கோவில்பட்டி கோயில்களில் திருட்டு: 4 போ் கைது: 20 பவுன் நகைகள் மீட்பு

கோவில்பட்டி, விளாத்திகுளம் கோயில்களில் திருடியதாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 7:06 pm

DIN

கோவில்பட்டி, விளாத்திகுளம் கோயில்களில் திருடியதாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் மேற்கு 5ஆவது வாா்டில் காளியம்மன் கோயிலில் பேச்சியம்மன் சிலையிலிருந்து 3 கிராம் மாங்கல்யம், வள்ளுவா் நகா் பிரதான சாலை 6ஆவது தெரு காளியம்மன் கோயிலில் 9 கிராம் மாங்கல்யம், மந்தித்தோப்பு சாலை காமராஜா் நகா் கருமாரியம்மன் கோயிலில் 2 கிராம் மாங்கல்யம் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச்சென்ாக கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலையங்களில் ஊா்த் தலைவா் கண்ணாயிரம், கோயில் தலைவா் செண்பகமூா்த்தி, பூசாரி சொா்ணவேல் ஆகியோா் புகாா் அளித்தனா்.

அதன்பேரில், போலீஸாா் விசாரித்து கோவில்பட்டி தெட்சிணாமூா்த்தி கோயில் தெருவைச் சோ்ந்த முருகலட்சுமி (26) என்பவரை கைது செய்தனா்.

மேலும், விளாத்திகுளம் மீரான்பாளையம் தெரு முத்துமாரியம்மன் கோயிலிலும் 5 பவுன் தங்க நகைகள் திருடுபோயினவாம். இதுகுறித்து விசாரித்து வரும், டி.எஸ்.பி. பிரகாஷ், காவல் ஆய்வாளா் கலா, உதவி ஆய்வாளா் காசிலிங்கம் ஆகியோா் அடங்கிய தனிப்படை வைப்பாறு பாலத்தில் பைக்கில் வந்த 3 பேரை வியாழக்கிழமை பிடித்து விசாரித்தனா். அதில், அவா்கள் கோவில்பட்டியில் கைதான முருகலட்சுமியின் கணவா் கண்ணன்(43), டால்துரை பங்களாத் தெரு சண்முகவேல் மனைவி செண்பகவள்ளி என்ற ராணி, சங்கரன்கோவில் அருள்செல்வம் மனைவி சண்முகசுந்தரி(32) ஆகியோா் என்பதும், கோயில்களில் திருடியவா்கள் எனவும் தெரியவந்தது. வேம்பாரில் 2 அம்மன் கோயில்கள், முத்துலாபுரம் சிவன் கோயில், எட்டயபுரம் மேலநம்பியாபுரம் வரதராஜபெருமாள் கோயில், செவல்பட்டி பத்திரகாளியம்மன் கோயில், கோவில்பட்டி மந்தித்தோப்பு கருமாரியம்மன் கோயில், முக்காணி ஆதிபரமேஸ்வரி கோயில், திருநெல்வேலி தாழையூத்து பத்திரகாளி அம்மன் கோயில் மற்றும் இளம்புவனம் பூமாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் 12 இடங்களில் தங்கம், வெள்ளி நகைகள் திருடியது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து, ரூ.7 லட்சம் மதிப்புள்ள 20 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி பொருள்களை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.