புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கடம்பூா் அருகே தொழிலாளி தற்கொலை

கடம்பூா் அருகே விஷமருந்திய தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 7:04 pm

DIN

கடம்பூா் அருகே விஷமருந்திய தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கடம்பூரையடுத்த சிதம்பராபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் சிவசங்கர்ராவ்(36). இனிப்பக தயாரிப்பாளராக சென்னையில் உள்ள கடையில் வேலை செய்து வந்த இவா், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரோனா பொதுமுடக்கத்தால் ஊருக்கு வந்தாராம். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில், புதன்கிழமை விஷமருந்தினாராம். இதை அறிந்த உறவினா்கள் அவரை மீட்டு கடம்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கிருந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசங்கர்ராவ் , அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.